குருவியொன்று வந்து என் கதவைத் தட்டியது. என் காதோரம் ஒரு கதை சொன்னது. ஹக்கீம் தமிழ் டயஸ்போறாவின் அடிவருடி என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.வட கிழக்கு இணைப்புக்கான காய் நகர்த்தல்களை ஹக்கீம் அழகாகச் செய்கிறார் என்றும் கூறினேன்.அது சாத்தியமா என்பது வேறு கதை.
படத்தில் இருப்பது சுஷ்மா சுவராஜ்.இந்திய வெளிவிவகார அமைச்சர்.சென்ற வருடம் பெப்ரவரி 6ம் திகதி முஸ்லிம் காங்கிறசின் ஒரு குழு இலங்கைக்கு வந்த இவரைச் சந்தித்தது.இது எல்லோருக்கும் தெரியும்.
எனது குருவி சுலைமானின் ஹூத்ஹூதைப் போன்றது.அது ஊரெல்லாம் சுற்றித்திரிந்து உண்மைக் கதைகளை எனக்கு கொண்டுவந்து சொல்லும்.
எனது குருவி சொன்ன கதை இதுதான்.இது பலருக்குத் தெரியாது.
சுஷ்மா சுவராஜுடனான கலந்துரையாடலின் போது வட கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிறஸ் தடையாக நிற்காது என்று சுஷ்மிதாவிற்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது.அந்த வாக்குறுதியைக் கொடுத்தவர் நிஸாம் காரியப்பர்.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் படலம் ஏலவே ஆரம்பித்துவிட்டது. காதர் அவர்கள் காங்கிறசின் செயலாளர் பதவியிலிருந்து அவசரமாக நீங்கப்பட்டதும் அவசர அவரசரமாக நிஸாம் காரியப்பர் பதவிக்கு வந்ததும் இதனால்தான்.
இப்படி எனது குருவி பல செய்திகள் இனிச் சொல்லும்.
மக்களே,
எழும்புங்கள்.எச்சரியுங்கள்.எதிருங்கள்.