றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் : நாமல் ராஜபக்ச

உத்தேச அரசியலமைப்பை நிறைவேற்ற சர்வதேச அழுத்தங்களைப்பெறவே றோஹிங்கிய அகதிகள் மீது திட்டமிட்டு தாக்குதல்மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறினார்.

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்

மியன்மார் அகதிகள் தொடர்பான பிரச்சினையை விவாதப்பொருளாக்கினர்கல்கிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த அகதிகள்அச்சுறுத்தப்பட்டனர்சர்வதேசங்களுக்கு செய்திகளை கொண்டு சென்றனர்.இனவாதிகள் கைது செய்யப்பட்டனர்.இதில் இம்முறைகுறித்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த விதமான பிரச்சினைகளையும் வழங்காமல் கைதாகியுள்ளனர் என்ற விடயமே இதுஇவ்வரசினால் நடாத்தப்பட்ட நாடகம் என்பதை தெளிவாக்குகிறது.அவர்கள் ஆடச் சொன்னால் ஆடுவார்கள்.அடங்கச் சொன்னால்அடங்குவார்கள். 

நன்றாக சிந்தித்து பாருங்கள்இவர்கள் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இதனை செய்திருந்தால் அவ்வளவு இலகுவில்கைதாகியிருக்க மாட்டார்கள்.உச்ச கட்ட இனவாதத்தை பரப்பி இருப்பார்கள்.

இலங்கையின் புதிய அரசியலமைப்பில் சர்வதேச தலையீடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.உலக நாடுகள் அனைத்தும்இதற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லைமுஸ்லிம்கள் நாடுகள் சில உள்ளடங்கலாக சில நாடுகள் எதிரானநிலைப்பாட்டை கொண்டுள்ளன.இதற்கு இவ் அரசியலமைப்பினூடாக சில நாடுகள் தங்களது நலனை மையப்படுத்தியுள்ளது போன்ற  சில காரணங்கள் உள்ளனஒரு நாட்டுக்கு சாதகம் என்றால் மற்றைய நாடுகளுக்கு அது பாதகமாக அமையலாம்இதுவெல்லாம்வல்லரசு நாடுகளின் இராஜதந்திர நகர்வுகள்.

இந் நாட்டின் அரசியலமைப்பு வரைபில் வெளிநாட்டு சட்ட வல்லுனர்கள் பலர் பங்களிப்பு செய்துள்ளதாகவும் தகவல்கள் உள்ளனகுறித்த இச் செய்தியினூடாக இலங்கையில் சிறுபான்மையின மக்களை திருப்தி செய்யும் வகையிலான அரசியலமைப்பு மாற்றம் என்றசெய்தி கொண்டு செல்லப்படும்இதன் மூலம் எதிர்க்கும் நாடுகளை அணைத்துக் கொள்ளலாம். 

தற்போது இவ்வரசு  கொண்டுவர சிந்திக்கப்படும் அரசியலமைப்புக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெரும் சவாலாகஅமைந்துள்ளார்.அவரை எதிர்கொள்ள பெரும் பலம் அவசியம்.குறித்த நிகழ்வினூடாக சிறுபான்மையின மக்களுக்கு அரசியலமைப்பின்தேவை உணர்த்தப்படுவதால்,நடுநிலை நாடுகள் பெரும் ஆதரவை வழங்கும்இதனை முன்னாள் ஜனாதிபதி எதிர்க்கும் போது அவருக்குஎதிராகவும் குறித்த எதிர்க்கும் நாடுகளுக்கு எதிராகவும் பலமிக்க ஆதரவு இலங்கை அரசுக்கு கிடைக்கலாம்இப்படியான சிலவற்றைகருத்தில் கொண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்றே இந்த அகதிகள் அச்சுறுத்தப்பட்ட விடயமாகும்.

இந்த அரசாங்கம் 62 லட்சம் வாக்காளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் 58 லட்சம் வாக்காளர்களை புறக்கணிக்கமுடிவெடுத்துவிட்டனர் என்றே கூறவேண்டும்.

இதற்கும் முஸ்லிம் அப்பாவி அகதிகளை இவ்வரசு கருவியாக பாவித்துள்ளதுஇவ்வரசு தனது விடயங்களை சாதிக்க எதனையும்செய்யத் தயங்காது என்பதை இலங்கை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.