புதிய உள்ளுராட்சித்  தேர்தல் முறைமை 60 வீதம் வட்டார முறையிலும் , 40 வீதம் கலப்பு தேர்தல் முறையிலும் இடம்பெறும்

Ashraff.A. Samad 
புதிய உள்ளுராட்சித்  தேர்தல் முறைமை தேசிய எல்லை நிர்ணய கமிட்டியின் தீர்மாணத்திறக்கு ஏற்ப  60 வீதம் வட்டார முறைமையையும், 40 வீதம் கலப்பு தேர்தல் முறையில் எதி;ர்காலத்தில் நடத்தவிருக்கும் தேர்தல் நடாத்தப்படும். என நேற்று(24) அமைச்சர் பைசர் முஸ்தபா அவரது அமைச்சில்  நடாத்திய ஊடக மாநாட்டில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு தெரிவித்தாவது – 

இம்முறை மொத்தமாக 8486 உறுப்பிணர்கள்  அதில் வட்டார முறைமையில் 5092 உறுப்பிணர்களும் கலப்பு முறைமையில் 3394 உறுப்பிணர்கள் அடங்குவர்.   உள்ளுராட்சித் தேர்தலுக்கு பதியப்பட்ட கட்சிகள் ருபா  1500 கட்டுப்பணத்தில் இருந்து எதிர்காலத்தில் ருபா 5000 வும்  சுயாதீன குழு ருபா 5ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ருபாவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இத் தேர்தல் வேற்பு மனுவில் ஆகக்குறைந்தது 30 வீதம் இளைஞர்களுக்க இடம் ஒதுக்கப்படல் வேண்டும் 30வீதத்தில் குறைந்தாக வேட்பு மனு காணப்பட்டடால் நிராகரிக்கப்படும். 

மேலும் 2016 இல01 தேர்தல் சட்டத்தின் கீழ்  உள்ளுராட்சித் சபைகளில் மொத்த உறுப்பிணர்களில் ஆகக்குறைந்தளவாக 25 வீதம் பெண்கள் சபைகளில் கட்சிகளினால் நியமிக்க்பபடல் வேண்டும் ;;10 வீதமாக பெண்களும் வேற்புமனுவில் உள்ளக்கபடல் வேண்டும்.

நுவரேலியா மற்றும் கல்முனை சாய்ந்தமருது புதிய உள்ளுராட்சி சபைகள் உருவாக்குவதில் எல்லை நிர்ணயம் அடையாளம் காணப்படல் வேண்டும். இந்த தேர்தலுக்குப் பின்னரே இந்த சபைகள் உருவாக்கப்படும். என அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்தார். 
சமுர்த்தி அலுவலகர்கள், கிராம சேவையாளர்கள்  மற்றும்  வெளிக்கள உத்தியோகத்த்ர்கள் ஈ உள்ளுராட்சி சபைகளது   அரச உத்தியோகத்தல்கள்    உள்ளுராட்சித் தேர்தல் கேட்க முடியாது. 
தேர்தல் தினங்களை தீர்மாணிப்பது பற்றி ஜனாதிபதி பிரதமரே தனக்கு அறிவித்ததும் அதற்குரிய திகதிகள் தீர்மாணித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும். என அமைச்சா் தெரிவித்தார்.