Home அரசியல் கல்முனை, சாய்ந்தமருது மக்களே ! உங்களுக்குள் பிரிந்திவிடாது ஒற்றுமையாக செயற்படுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்

கல்முனை, சாய்ந்தமருது மக்களே ! உங்களுக்குள் பிரிந்திவிடாது ஒற்றுமையாக செயற்படுங்கள் – நாடாளுமன்றில் ரிஷாட்

 ஊடகப்பிரிவு

 

நல்லாட்சியை உருவாக்குவதில் மும்முரமாகச் செயற்பட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எல்லை மீள்நிர்ணயத்தில் கூட அநியாயம் இழைக்கப்படுவதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தசட்டமூல விவாததில் அமைச்சர் உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,நான் மிகவும் மன வேதனையுடன் இச்சபையில் உரையாற்றுகின்றேன்.

மீள எல்லை நிர்ணயத்திற்கான குழுவை அமைச்சர் பைசர்முஸ்தபா அமைத்த போது இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமென நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்அதன் பின்னர் அமைச்சரவையில் உப குழு ஒன்றை அமைக்குமாறு நாங்கள் வேண்டிக்கொண்டதற்கிணங்க அமைச்சரின் தலைமையில் பல கூட்டங்களில் பங்கேற்றோம்.

எனினும் மக்களின் கோரிக்கைகளும் அவர்களின் பிரதிநிதிகளின் பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளமுடியாத பல முடிவுகளை எடுத்திருக்கிறார்கள்இது சிறுபான்மை சமூகத்திற்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதுநாட்டில் எல்லா மாவட்டங்களிலும் சிறுபான்மை மக்களாலும்தமிழ்முஸ்லிம் மலையகத் தமிழர்கள் பாராளுமன்றத்திலோமாகாணசபையிலோ பிரதிநிதித்துவத்தைப் பெற முடியாதுஇந்த நாடு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து நிம்மதியிழந்து தவிக்கின்றதுஇந்த நாட்டிலே பொருளாதாரம் சீரழிந்து ஓர் இனம் இன்னோர் இனத்துக்கெதிராக போராடி நாடு நலிவடைந்திருக்கின்றது.

நல்லாட்சியை உருவாக்குவதில் சிறுபான்மை மக்கள்குறிப்பாக முஸ்லிம் மக்கள் பாடுபட்டு ஜனாதிபதி மைத்திரியையும்பிரதமர் ரணிலையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக வாக்களித்திருக்கின்றார்கள்கடந்த ஆட்சியில் ஞானசார தேரரின் அட்டகாசங்கள் இனிதொடராது என நம்பினார்கள்பள்ளிவாசல்கள்பாதுகாக்கப்படுமென நம்பினார்கள்அது மாத்திரமன்றி எல்லோருக்கும் சமனான உரிமைகள் கிடைக்குமென்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்தமாக சிறுபான்மை சமூகம் வாக்களித்ததுஅவ்வாறான நிலையில்மொனராகலைஅநுராதபுரம் போன்ற சிறுபான்மை மக்கள் வாழும் இடங்களில் ஓர் உள்ளூராட்சிப் பிரதிநிதித்துவத்தையேனும் பெற்றுக் கொள்ள முடியாத நிலையை இந்தத் திருத்தச் சட்டமூலம் தடுக்குமாக இருந்தால் அது ந்த வகையில் நியாயம்இவ்வாறான பேராபத்தை தடுத்து நிறுத்த வேண்டும் எனஅமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் வேண்டினோம்.

சட்டத்திலிருக்கும் நியாயத்தின் பிரகாரம் எங்களுக்கு நீதிபெற்றுத்தர முடியாதென அமைச்சர் பைஸர் முஸ்தபாஎங்களிடம் தெரிவித்தார்இன்று காலை (24) பிரதமரைச் சந்தித்து இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதெனவும்அதற்கு எங்கள் மனச்சாட்சி இடம்கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தேன்.

இந்த நாட்டிலே சமாதானம் நீடிக்க வேண்டுமென்பதிலும்நாடு பிளவு படக்கூடாதென்பதிலும் உறுதியாக இருப்பவர்கள் நாங்கள்அதனாலேயே வடக்கிலிருந்து ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் துரத்தப்பட்டனர்அவ்வாறான அகதிச் சமூகம் வாழும் இடங்களில் குறிப்பாக முசலிப் பிரதேசத்தின் 2012 ஆம் ஆண்டின் அடிப்படையில் அங்குள்ள இடங்களான கொக்குப்படையான்கொண்டச்சிமுள்ளிக்குளம்கரடிக்குளி ஆகிய இடங்களை ஒன்றிணைத்து சிறுமைப்படுத்தி ஒரு பிரதிநித்துவத்தை உருவாக்கியுள்ளார்கள்அதே போன்று வேப்பங்குளம் பாலைக்குளி போன்ற இடங்களிலும் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

 அது மாத்திரமன்றி  பல இடங்களில் இவ்வாறு அநியாயங்கள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹ்ரூப் இந்த உயர் சபையில் தெரிவித்தார்இவ்வாறு இன ரீதியாக, மத ரீதியா சந்தேகங்களைஉருவாக்கக் கூடிய வகையில் இந்த பிரிப்புக்கள் அமைந்துள்ளனஇன்று காலை இது தொடர்பிலே நான் பிரதமரிடம் சொன்னேன்அதன் பிறகு அமைச்சர் ரவூப்ஹக்கீம்அமைச்சர் பைசர் முஸ்தபாபாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் பிரதமரைச் சந்தித்தனர்அதே போன்று உள்ளூராட்சி சபைகளை உருவாக்க வேண்டிய திருகோணமலைமட்டக்களப்புபுத்தளம்அம்பாறைகற்பிட்டி போன்ற இடங்களிலும் புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க வேண்டிய தேவை உள்ளது

ஆனால் அந்த விடயங்களை நிராகரித்து ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் புதிய உள்ளூராட்சி சபையை வழங்குவற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அறிந்தோம்புதிய உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கு அமைச்சருக்கு இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்துவதற்குக் கூட அவருக்குத் தடை விதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் நாங்கள் அறிகின்றோம்இது தொடர்பிலும் பிரதமரிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் எனவும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்னர்இவைகளை அமைப்பதற்கான உறுதி மொழியைத் தாருங்கள் என்றும் வேண்டினோம்.

இந்தத் திருத்தச் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டாலும் அமைச்சரவைக்கு ஒரு திருத்தத்தைச் சமர்ப்பித்து எங்களுக்கு நியாயம் பெற்றுத்தருமாறு பிரதமரிடம் நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் பைசர் முஸ்தபாவையும் பிரதமர் அழைத்து இதற்கான உறுதிமொழியைத் தந்துள்ளார்இது செயற்படுத்தப்பட்டாலேயே நாங்கள் ஆதரவாக வாக்களிக்க முடியும்இல்லையேல் எமது மனச்சாட்சி இடம் கொடுக்காது தேவையேற்படின் பதவிகளை துறந்தாவது போராடுவோம்.

சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சிசபையொன்றை அமைத்துத்தருவதாக கடந்த தேர்தல் காலத்தில் பிரதமர் அந்தபிரதேசத்திற்குச் சென்றிருந்த போது வாக்களித்திருந்தார்இது தொடர்பில் தற்போது இடம்பெறும் செயற்பாடுகள கல்முனைசாய்ந்தமருது மக்களிடையே ஒரு கலவரத்தை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளதுஅண்மையில் கல்முனை மக்கள் என்னை சந்தித்த போது ஏற்கனவே இருந்தது போன்று கல்முனையை நான்காக பிரிக்குமாறு கோருகின்றனர்கல்முனை, சாய்ந்தமருது மக்களிடம் நாங்கள் அன்பாக வேண்டிக்கொள்வது உங்களுக்குள் பிரிந்திவிடாது ஒற்றுமையாக செயற்படுங்கள்

பிரதமர் எங்களுக்கு வாக்குத் தந்திருக்கின்றார்அவரிடம் நியாயத்தை சொல்லி யாருக்கும் அநியாயம் இடம்பெறாது இந்த விடயத்தில் தீர்வு காண்போம்அமைச்சர் பைசர் முஸ்தபா மிகவும் நேர்மையானவர். அவர்             நியாயமாகச்செயற்படுவார்அமைச்சர் பைசர் முஸ்தபா இந்தச் சட்டமூலத்துடன் விரைவில் மீள்நிர்ணய சட்ட மூலத்தை கொண்டு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுகொடுப்பார் எனவும் நம்புகின்றோம்அத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்கும் நுவரெலியா மாவட்ட மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன் என அமைச்சர்தெரிவித்தார்.


Sent from my iPhone