மன்னர் சல்மானின் வருகையால் மொராக்கோ நாட்டின் சுற்றுலா வருவாயில் 1.5 சதவீதம் அதிக லாபம்

சவுதி அரேபிய மன்னர் சல்மான் இந்த ஆண்டு தனது கோடை விடுமுறையை மொராக்கோ நாட்டில் கழித்தார்.

அங்குள்ள டேன்ஜியர் நகரில் அவருக்கு சொந்தமான ஆடம்பர அரண்மனை உள்ளது. இது 74 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

அங்கு அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார். அவருக்கு பணிவிடை செய்ய 200 கார்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்தன.

மன்னரின் வருகையை முன்னிட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக அரண்மனை புதுப்பிக்கப்பட்டது. அங்கு புதிதாக ஹெலிகாப்டர் தரை இறங்கும் வகையில் புதிய தளம் அமைக்கப்பட்டது. புதிதாக சில குடியிருப்புகளையும் கட்டியுள்ளனர்.


முன்னதாக மொராக்கோ வந்து இறங்கிய மன்னரை அந்நாட்டு பிரதமர் சதேதின் ஆத்மானி விமான நிலையம் வந்து வரவேற்றார். மேலும் பாதுகாப்புக்காக மொராக்கோவின் 30 பேர் கொண்ட சிறப்பு படையும் வழங்கப்பட்டது.

மொராக்கோ நாட்டில் மன்னர் சல்மான் தங்கியிருந்த போது ரூ.650 கோடி (100மில்லியன் டாலர்) செலவு செய்யப்பட்டது. அது சவுதிஅரேபியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் மன்னர் சல்மானின் வருகையால் மொராக்கோ நாட்டின் சுற்றுலா வருவாயில் 1.5 சதவீதம் அதிக லாபம் கிடைத்துள்ளது.