கல்முனைக்கான அதாஉல்லாவின் தூர நோக்கு சிந்தனைகளும்…
அதை எதிர்த்ததால் கல்முனைக்கு வந்த வினைகளும் ஒரு பார்வை ….
01, கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வீதியை காபட் வீதியாய் போடுவதற்கு அதாஉல்லா முற்பட்ட போது அதே கல்லால் எரிந்து அவரை துரத்தியடித்தோம்..
அதன் பின் விளைவு….
காபட் வீதியாய் அமையவிருந்த வீதி பல சிரமங்களுக்கு மத்தியில் பல வருடங்களின் பின்னர் கொன்றீட் வீதியாய் அமையப் பெற்றது…
02 , கிரின்பீல்ட் மக்களுக்காக புதிய பாலம் அமைப்பதற்கு பாலத்தோடு வந்திறங்கினார் வேண்டாமென்ற பிடிவாதத்தோடு ஏற்றிக் கொண்டோடும் அவரை விரட்டினோம்…
அதன் பின் விளைவு….
எங்கேயோ கழத்தப்பட்ட பழைய பாலமொன்று பொருத்தப்பட்டு மக்கள் பாவணைக்கு விடப்பட்டுள்ளது,
03 , கல்முனைக்கு மிகவும் நவீனமான மா நகர சபை கட்டடமொன்றை அமைக்க எண்ணியுள்ளேன் இதற்கான அனுமதி தாருங்களென அன்றைய மேயரிடம் மிகவும் தயவாக கேட்ட போதும் மறுக்கப்பட்டது.
அதன் பின் விளைவு…
இன்றுவரை இலங்கையிலேயே மிகவும் பழமையான மா நகர சபை கட்டடம் என்ற பெருமையோடு காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது…
04 , சாய்ந்தமருது மக்களின் வேண்டுதலுக்கமைவான தனியான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை கருத்தில் கொண்டு….
கல்முனைக்கோ ஏனையே ஊர்களுக்கோ எவ்வித பாதிப்பும் வராத வண்ணம் பல நாட்கள் ஆலோசனை செய்து….
நான்கு சபைகளாக ஒரே நேரத்தில் பிரித்து தங்களை தாங்களே ஆட்சி செய்யும் வகையில் வரைவை மேற் கொண்டு அமுல் படுத்த முற்பட்டார் அதற்கெதிராய் கிளந்தெழுந்து போராடி தடை செய்தோம்…
அது மட்டுமல்லாமல் அவரது மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுத்தீனை அதாஉல்லாவையும் அவருடைய கட்சியையும் விட்டும் வெளியேறவும் செய்தோம்….
அதன் பின் விளைவு….
எப்படியாகப் போகுதோ ? அல்லாஹு அஃலம்
ஷா மஜிட்
மனச்சாட்சிக்கான பதிவு