மஹிந்தவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்குமிடையே சந்திப்பு

கொழும்பு அரசியல் சூழ்நிலை மிகவும் பரபரப்பாக உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே நேற்றிரவு முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச குற்றப் புலனாய்வு பிரிவினாலும், அவரின் இளைய புதல்வாரன ரோஹித ராஜபக்ச, காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவினாலும் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், நேற்று இரவு இந்த அவசர கூட்டம் இடம்பெற்றுள்ளது.

 மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பில் தற்போது அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.