ரவி கருணாநாயக்க விவகாரம் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்குவது நியாயமற்றது :அநுரகுமார

 

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம், அடுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜே. வி. பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில், சட்டமா அதிபர் திணைக்களம் மீது அரசாங்கம் குற்றம் சுமத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவின் பணிகள் ஒருபோதும் முடக்கப்படக் கூடாது என்றும் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.