வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன நியமிக்கப்படலாம் என அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க நேற்றைய தினம் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரையில் அந்த பொறுப்யை ஜனாதிபதி கவனித்துக்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில், வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பனவை நியமிப்பதற்கு அரசாங்கத் தரப்புக்கள் இணங்கியுள்ளதாக தெரிவித்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் வெளிவிவகார அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது அபிவிருத்தி பணிகள் தொடர்பான அமைச்சர் பதவியில் இருக்கும் திலக் மாரப்பன, வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் திலக் மாரப்பன சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருந்து, பின்னர் பதவி விலகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சு பதவிக்கு நவின் திஸாநாயக்க மற்றும் கலாநிதி சரத் அமுனுகம ஆகியோரின் பெயர்களும் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.