வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க நேற்று நடாளுமன்றத்தில் அறிவிப்பொன்றை விடுத்து அந்தப் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து, கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், ரவி கருணாநாயக்க தமது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய எடுத்த தைரியமான முடிவை பாராட்டுவதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரச பதவிகளை வகித்த பலர் மீதும் அரசாங்க மாற்றத்தின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான யாரும் இவ்வாறு செயற்பட்டிருக்கவில்லை.
இது ஏனைய பலரும் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்னுதாரணமாகும் என சம்பந்தன் கூறினார். இதையடுத்து, கருத்து வெளியிட்ட ரவி கருணாநாயக்க சம்பந்தனின் இந்த உரைக்கு தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.