கிழக்கு மாகான ஐக்கிய சமூக சேவை ஒன்றியம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை எடுக்குமுகமாக அவ்வமைப்பின் குழுக்கூட்டம் !

download
(ஜஹான்.எம்.மஹ்ரூப்)
கிழக்கு மாகான ஐக்கிய சமூக சேவை ஒன்றியம் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் நியமனம் தொடர்பாக தமது நிலைப்பாட்டை எடுக்குமுகமாக அவ்வமைப்பின் குழுக்கூட்டம் 22. 05. 2015 அன்று நடாத்தி அதில் எடுத்த தீர்மானங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கு மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது, 
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கிழக்கிலங்கையின் ஐக்கிய சமூகசேவை ஒன்றியம் இப்பிரதேச நலன்களில் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது, அவ்வாறே எமது பிரதேச கல்வி மற்றும் அபிவிருத்தியில் கரிசனைகொள்ளும் நாம் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் நியமனத்தiயும் உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.
எமது கிழக்குப் பிராந்தியம் நீண்டகால யுத்தத்தினாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியினாலும் பாதிக்கப்பட்டு கல்வியில் பின்னடைந்திருக்கும் நிலையில் எமது பிரதேசத்தின் கல்விக் கண்ணாக விளங்குகின்ற தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் நியமனம் மற்றும் அதன் எதிர்காலம் பற்றிய கவலை மீண்டுமொருதடவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
ஆரம்ப காலங்களில் பல்கலைக்கழகத்தின் உள்ளே தகைமையானவர்கள் இல்லாமலிருந்த காலங்களில் வெளியூரைச் சேர்ந்தவர்; ஒருவரும் நியமிக்கப்பட்டிருந்தார், அப்போதெல்லாம் பல்கலைக் கழகத்தில் தளம்பல் நிர்வாகமும், நிர்வாக வெற்றிடமுமே பெரிதும் உணரப்பட்டது, இப்பல்கலைக் கழகத்திற்கு உபவேந்தராகத் தகுதியானவர்கள் உள்ளே இருக்கும்போது பதவிக்காக மட்டும் போட்டியிட்டு வெளியிலிருந்து ஒருவர் வருவதை பிரதேச சமூகங்கள் நிராகரிக்கின்றன. தென்கிழக்கு மண்ணில் எந்த முன் அனுபவமோ, பல்கலைக் கழகத்தில் எந்தவிதமான நிர்வாக அனுபமோ அற்ற ஒருவரின் வாக்கு எண்ணிக்கையை மட்டும் உப வேந்தருக்கான தகுதியாக பார்க்கப்படக்கூடாது என்பது கல்வியியலாளர்களின் அபிப்பிராயமாக உள்ளது. தகைமையும், நிலபுல அனுபவும், நிர்வாக அனுபவமும் நிறையப் பெற்ற ஒருவரை உள்வேட்பாளர்களில் இருந்து நியமித்தால் ஒரு மிகப்பெரிய நிறுவனமான பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் முதல்நாள் தொடக்கம் சிக்கலின்றி செயற்படும், மாறாக புதியவர்கள் வந்து பயிற்சியெடுத்துச் செல்லும் மைதானமாக இப்பல்கலைக்கழகம் தொடர்ந்தும் செயற்பட அனுமதிப்பது பல்கலைக்  கழகத்தின் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களின் அசமந்தத்தையே எடுத்துக்காட்டுவதாக அமையும். 
மக்களுக்காக உழைக்கும் சமூக சேவை நிறுவனம் என்ற வகையில் மக்களின் அபிலாசைகளை பொறுப்புவாய்ந்த அமைச்சரும் எமது சமூகத்தின் பிரதிநிதியுமான தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருவது எமது கடமையாகும், மேன்மை தங்கிய ஜனாதிபதியின் நல்லாட்சியின் கீழ் நடைபெறப்போகும் இந்த முதலாவது உப வேந்தர் நியமனம் பலத்த எதிர்பார்ப்புக்களை பிரதேச மக்களிடமும் குறிப்பாக பெண்கள் சமூகத்திடமும் ஏற்படுத்தி இருக்கின்றது.
எனவே மேன்மை தங்கிய ஜனாதிபதியவர்கள் இதுவிடயத்தில் மக்கள் விருப்பப்படி நியாயமானதும் சிறப்பானதுமான முடிவை எடுக்க தகுந்த சிபாரிசினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைவர் என்றவகையில் வழங்கி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.