பிரதான கட்சிகள் இரண்டும் எப்போதும் ஒன்றிணைந்து இருக்க முடியாது: எஸ்.பி.திஸாநாயக்க

பிரதான கட்சிகள் இரண்டும் எப்போதும் ஒன்றிணைந்து இருக்க முடியாது எனவும், அவ்வாறு இருக்க அவசியம் இல்லை எனவும், தேர்தலின் போது வேறுவேறாக போட்டியிட முடியும் எனவும், அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 


ஹகுரான்கெத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வின் போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேனவிடம் தனது விருப்பத்தின் பேரில் கட்சியை ஒப்படைத்துவிட்டு தற்போது, வேறுபுறம் இருந்து பகைப்பது தகுதியானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி தனியாட்சி அமைப்பதற்கான சக்தியை கோரி நிற்கையில், இதுபோன்று செயற்படுவது பொருத்தமில்லை என சுட்டிக்காட்டிய திஸாநாயக்க, செய்ய வேண்டியது கட்சியின் ஒற்றுமையையும் வலிமையையும் மேம்படுத்தும் நடவடிக்கைகளே எனவும் குறிப்பிட்டுள்ளார்