துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் மன வேதனையடைகின்றேன்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் மன வேதனையடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையானது இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

பொரலஸ்வெவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஹம்பாந்தோட்டை துறைமுக உடனபடிக்கை விடயமானது எதிர்கால தலைமுறையினருக்கு செய்த பாரிய அநீதியாகும். இந்த உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்துடன், கலந்துரையாட வேண்டும்.

இந்த உடன்படிக்கையினால் அரசாங்கத்திற்கு உள்ள உரிமைகள் எவ்வாறனது என்பது தொடர்பில் முதலில் நிச்சயிக்கப்பட வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் மன வேதனையடைவதாகவும், துறைமுக உடன்படிக்கையானது இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் போது மகிந்த ராஜபக்ச சீனா அரசாங்கத்துடன் மிகவும் நெருங்கி செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.