பிணைமுறி மோசடி விவகாரத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க உடனடியாகத் தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரச்சினை உருவாகியுள்ள இந்த வேளையில் அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் இருப்பது விசாரணைகளுக்குப் பாதகமாக அமையும்.
ஜனாதிபதியின் தலைமையிலான இந்த அரசுக்கு வாக்களித்த 62 இலட்ச மக்களின் நம்பிக்கையை சிதறடிக்காமல் ரவி கருணாநாயக்க தனது பதவியை இராஜிநாமா செய்து ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டும்.
அரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் தொடர்ந்தும் பிற்போட்டு வருவதற்குப் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீதும் அதைச் சார்ந்தவர்கள் மீதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அவப்பெயரும் ஒரு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.