வட்டரக விஜித தேரருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்

பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

                                                                                         FILE IMAGE

ஜனாதிபதி செயலக பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை, கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.