மீண்டும் பேசப்படும் வசீம் ,ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம்

அர்ஜுன் அலோசியசிடம் லஞ்சம் பெற்ற முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை காப்பாற்ற தற்போது வஸீம் தாஜூதீனை அரசாங்கம் அழைத்து வந்துள்ளதாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

நேற்று பேருவளையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர் ..

சற்றுமுன்னர் இங்கு உரையாற்றிய நாமல் எம் பி “வஸீம் தாஜுதீனின் மரணம் கொலை என்றார்கள்பின்னர் யோஷித கொன்றதாககூறினார்கள்பின்னர் நான் என்றார்கள்இப்போது எனது தாய் என்கிறார்கள்அடுத்தது எனது பாட்டி என்பார்கள்” என கூறினார்.

உண்மையில் இதில் வேடிக்கையான் விடயம் என்ன என்றால் அராசாங்கத்திற்கு நெருக்கடியான நிலமை வரும் போது ஆரசாங்கத்தைஅந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வஸீம் தாஜுதீன் வருவார் என்பதே உண்மையாகும்.

இதனை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டுகொள்ளோம்.தற்போது அரசுக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.அலோசியஸிடம் லஞ்சம் வாங்கி ரவி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.அவரை காப்பாற்றவும் மக்கள் மனங்களை திசைதிருப்பவும் நல்லாட்சிக்கு தற்போது மஹிந்த குடும்பம் தேவைப்படுகிறது.

அதனால் தற்போது தாஜுதீன் களமிறக்கப்பட்டுள்ளார்இந்த படம் இன்னும் சில வாரங்களுக்கு வெற்றிகரமாக ஓடும் நாம் அவற்றைகண்டு பயப்படப் போவதில்லை ஆயிரம் சிறைகளை காணவும் தயாராக இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.