மஸ்­ஜிதுல் அக்ஸாவில் இஸ்ரேலிய ராணுவத்தினர் அராஜக நடவடிக்கை – 3 இளை­ஞர்கள் உயி­ரி­ழப்பு

ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கிழக்கு ஜெரூ­ஸ­லத்­தி­லுள்ள மஸ்­ஜிதுல் அக்ஸா வளா­கத்தில் இஸ்ரேல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள புதிய பாது­காப்புக் கெடு­பி­டி­களை நீக்­கு­மாறு கோரி பலஸ்­தீ­னர்கள் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரிய போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். 

இதன்­போது குறித்த போராட்­டத்தை கலைக்க இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் மேற்­கொண்ட அரா­ஜக நட­வ­டிக்­கை­களின் போது மூன்று பலஸ்­தீன இளை­ஞர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 400 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர் .மேலும் பல நூறு இளை­ஞர்­களை இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­தினர் கைது செய்­துள்­ளனர். 

டெம்பிள் மௌன்ட் என யூதர்­களால் அழைக்­கப்­படும் ஹரம் அல்-­ஷ­ரீபில் துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி தொடக்கம் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் பதற்ற நிலை உரு­வா­கி­யது. 

இந்த சம்­ப­வத்தைத் தொடர்ந்து இஸ்­ரே­லிய பொலிஸார் அல்-­அக்ஸா பள்­ளி­வாசலை தற்­கா­லி­க­மாக மூடி­ய­தோடு புனிதத் தலத்தில் வெள்­ளிக்­கி­ழமை தொழுகை நடாத்­து­வ­தற்கும் தடை விதித்­தனர். 

எனினும் சர்­வ­தேச ரீதி­யாக எழுந்த விமர்­ச­னங்கள் கார­ண­மாக இஸ்ரேல் ஜுலை 16 ஆம் திகதி அல்-­அக்ஸா பள்­ளி­வாசல் வளா­கத்தைத் திறந்­த­போ­திலும், உலோ­கங்­களை அடை­யாளம் காணும் கரு­விகள் மற்றும் சி.சி.ரி.வி. கம­ராக்கள் என்­பன நுழை­வா­யிலில் பொருத்­தப்­பட்­டன.

அதனைத் தொடர்ந்து பள்­ளி­வா­ச­லினுள் செல்ல மறுத்த பலஸ்­தீ­னர்கள் திறந்த வெளியில் தமது தொழு­கை­யினை நிறை­வேற்­றினர். அதன்­போதும் வன்­மு­றைகள் வெடித்­தன. 

கடந்த சில தினங்­க­ளாக இஸ்­ரேலின் நேரடித் துப்­பாக்கிச் சூட்­டி­னாலும், இறப்பர் குண்­டு­க­ளி­னாலும் 400  இற்கும் மேற்­பட்ட பலஸ்­தீ­னர்கள் காய­ம­டைந்­துள்­ள­தோடு சுமார் 100 பேர­ளவில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக செம்­பிறைச் சங்கம் தெரி­வித்­துள்­ளது. 

ஜெரூ­ஸலம் அல்-­குத்ஸின் வீதியில் இஸ்­ரே­லியப் படை­யி­ன­ருடன் ஏற்­பட்ட மோதல்­களில் மூன்று பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தோடு மேற்­குக்­கரை குடி­யேற்­றப்­ப­கு­தியில் கத்­திக்­குத்து மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகக்  கூறப்­படும் சம்­ப­வத்தில் மூன்று இஸ்­ரே­லி­யர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

கடந்த சனிக்­கி­ழமை கற்­களை வீசிய பலஸ்­தீ­னர்­களைக் கலைப்­ப­தற்கு இஸ்­ரே­லியப் படை­யினர் போலிக் குண்­டு­க­ளையும் நீர்த்­தாரைப் பிர­யோ­கத்­தையும் மேற்­கொண்­டனர்.  

இஸ்­ரே­லினால் அல் அக்ஸா மீது விதிக்­கப்­பட்­டுள்ள புதிய கட்­டுப்­பா­டுகள் மிகவும் உயர்ந்த அளவில் கூரு­ணர்­வு­மிக்க பிர­தே­சத்தை தனது ஆட்­சி­ய­தி­கா­ரத்­தினுள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவும் அதன் தன்­மையை மாற்­று­வ­தற்­கா­கவும் எடுக்­கப்­படும் முயற்­சி­யாக பலஸ்­தீ­னர்கள் கரு­து­கின்­றனர். 

அல் அக்ஸா பள்­ளி­வாசல் வளாக நுழை­வா­யிலில் பொருத்­தப்­பட்­டுள்ள உலோ­கங்­களை அடை­யாளம் காணும் கரு­விகள் அகற்­றப்­படும் வரை டெல் அவி­வு­ட­னான அனைத்து உத்­தி­யோ­க­பூர்வ தொடர்­பு­க­ளையும் இடை­நி­றுத்­து­மாறு பலஸ்­தீன ஜனா­தி­பதி மஹ்மூத் அப்பாஸ் உத்­த­ர­விட்­டுள்ளார். 

இத­னி­டையே, உலோ­கங்­களை அடை­யாளம் காணும் கரு­விகள் அகற்­றப்­படும் வரை இஸ்­ரே­லிய கட்டுப்பாட்டிற்கு எதிரான எமது போரட்டம் தொடருமெனவும், அதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை எனவும் ஜெரூஸலம் அல்-குத்ஸ் உயர் முஸ்லிம் மார்க்க அறிஞரான மொஹமட் ஹுஸைன் தெரிவித்துள்ளார். 

அல்-அக்ஸா பதற்ற நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று திங்கட்கிழமை கூடி ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.