அப்துர் ராசிக் பேசியது மன்னிக்க முடியாத குற்றமாகும் :கல­கொட அத்தே ஞான­சார தேரர்

தௌஹீத் ஜமா அத்தின் அப்துர் ராசிக் புத்­த­பெ­ரு­மானை தூசித்து பேசி­யமை மன்­னிக்க முடி­யாத குற்­ற­மாகும். அவரை யார் மன்­னிப்­பது? புத்­தரை அவ­ம­தித்துப் பேசி­விட்டு தவ­று­த­லாகப் பேசி விட்டேன் என்று பொய் பேசும் அவர் ஒரு பெரும் குற்­ற­வாளி, என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.


கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நடை­பெற்­று­வரும் புத்­தரை அவ­ம­தித்துப் பேசிய வழக்கில் தான் தவ­று­த­லாக புத்­தரை அவ­ம­தித்து விட்டேன் எனத் தெரி­வித்­தி­ருப்­பதும், வழக்கை முடி­வுக்கு கொண்­டு­வர, கோரி­யி­ருப்­பதும் வேடிக்­கை­யாக இருக்­கி­றது. அவர் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர வேண்டும் என்றும் அவர் கூறினார். 

கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் நடை­பெற்­று­வரும் பொது­பல சேனா தாக்கல் செய்­தி­ருந்த தௌஹீத் ஜமா அத் முன்னாள் செய­லாளர் அப்துர் ராசிக்­குக்கு எதி­ரான மத நிந்­தனை வழக்கு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே ஞான­சார தேரர் இவ்­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
 புத்­தரை அவ­ம­தித்­தவர் தண்­டனை பெற்றே தீர வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இறுதிவரை நீதிக்காக போராடுவோம் என்றார்.