தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுப்பதற்கு சிங்கள மக்களுக்கும் உரிமை உள்ளது: சுமனரத்ன தேரர்

புனானையில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாழைச்சேனை வெலிகந்தை – புனானையில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலை ஒரு எல்லைக்குள் மட்டுப்படுத்த வேண்டும்.

இல்லை என்றால், ஒரு இனம் இன்னொரு இனத்தோடு மோதி இரத்தம் சிந்தும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்களது காணிகள் அபகரிக்கப்பட்டு, அவர்கள் காடுகளிலும் வசதியற்ற பிரதேசங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். கரையோரப் பகுதியான அறுகம்பை தொடக்கம் மூதூர் வரைக்கும் ஏதாவது ஒரு தமிழ் நகரம் இருக்கின்றதா? எனவும் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் மக்களின் உரிமை தொடர்பாக குரல் கொடுப்பதற்கு சிங்கள மக்களுக்கு உரிமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.