அமெரிக்க தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுக்க ரஷியா திட்டம்

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ரஷியா செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரச்சனை தொடர்பாக அமெரிக்க உளவுத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் 35 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா சமீபத்தில் வெளியேற்றியது. மேலும் மேரிலேண்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் சந்தித்து இது குறித்து பேசினர்.

 


ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இது ரஷியாவை ஆத்திரம் அடைய செய்துள்ளது. தாங்களும் அமெரிக்காவும் சளைத்தவர்கள் அல்ல. பலம் வாய்ந்த நாடுதான் என்பதை நிரூபிக்க தயாராகி வருகிறது.

அமெரிக்காவின் தூதர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க ரஷியா முடிவு செய்துள்ளது. அதன்படி ரஷியாவில் தங்கியுள்ள 30 அமெரிக்க தூதர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மேலும் ரஷியாவில் இருக்கும் அமெரிக்க சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட உள்ளன.

இத்தகவலை ரஷிய பாராளுமன்றத்தின் மேலைவை செனட்டர் ஆன்ட்ரீ கில்மோர் தெரிவித்தார்.