ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரபின் மரணத்தைக் கொண்டாடிய கூட்டத்தைச் சேர்ந்தவரும் தனக்கு அரசியல் ரீதியாக அடையாளம் தேடி பல சிறிய கட்சிகளில் புகுந்து எங்குமே இடம் கிடைக்காத நிலையில் தற்போது கூகிள் ப்ளொக்கர் மூலமாக ஒரு செய்திப் பதிவை உருவாக்கி அனைத்து முன்னணி முஸ்லிம், தமிழ் இணைய தளங்களின் செய்திகளையும் வேகமாகத் திருடிப் புகழ்பெறும் குறுகிய நோக்கத்தில் இயங்கி வரும் கல்முனையைச் சேர்ந்த அஹமத் புர்கான் ஜே.பி. எனும் பெயரில் அறியப்படும் திருடனுக்கு எதிராக ஸ்ரீலங்கா பொலிஸ் அவசர பிரிவில் முறையிடப்பட்டுள்ளது.
விடுதலை செய்தி எனும் பெயரில் பதிவாளரின் அடையாளங்களை மறைத்து வெப்சிட்டி எனும் நிறுவனம் ஊடாக இணையப் பெயரைப் பதிவு செய்துள்ள குறித்த நபர் குறித்த பல குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதையடுத்து குறித்த நபருக்கும் அவருக்கு வடிவமைப்பில் உதவியாக இருந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, கூகிள் கொப்பிரைட் நிறுவனத்துக்கும் சட்ட ஆவணம் அனுப்பப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட இணைய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக சோனகர்.கொம் உறுதி செய்துள்ளது.
விடிய விடிய விழித்திருந்து பிற தளங்களின் செய்திகளை அச்சு அசகு பிசகாமல் கொப்பியடித்துப் பிரசுரித்து வரும் குறித்த நபரது பின்னணி மற்றும் வேகமாக புகழ் தேடுவதற்கான காரணங்கள் தொடர்பிலான விபரங்கள் விரைவில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
send by -sonakar.com