பாடசாலை மாணவி சகோதரி வித்தியாவின் கொலையை கண்டித்து கல்முனை யில் கடையடைப்பும் மாணவர்கள் ஊர்வலமும்!

முகம்மட் றின்ஸாத்

சில நாட்களுக்கு முன்னர் கயவர்களின் காமவெரிக்கு இலக்கான எமது சகோதரிக்கு உலகில் உள்ள அனைத்து மக்களும் தமது அனுதாபங்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் இன்று 2015.05.25 ம் திகதி கல்முனையிலும் மாணவி சகோதரி வித்தியாவின் கொலையை கண்டித்து  அனைத்து கடைகளும் முடப்பட்டு எந்த வித வியாபாரமும் இடம்பெறாமல் நகரமே வெறிச்சோடிப் போய் காணப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட மாணவி சி.வித்தியாவுக்கான விசாரணையை துரிதப்படுத்தி, மரண தண்டனை வழங்குமாறு கோரி தற்போது கல்முனை பிரதேச செயலகம் – தமிழ் பிரிவு முன்பாக மாணவர்கள் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றனர் 

அது மாத்திரம் இன்றி கல்முனை பாடசாலை மணவர்கள் சகோதரி வித்தியாவின் கொலையை கண்டிக்க தக்க ( அரசே!! பெண்களின் பாதுகாப்பை உருதிப்படுத்து ) மற்றும் ( நீதி கிடைக்க கண் இமை விழிக்குமா ) போன்ற  பதாதைகளையும் கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. 

எது எவ்வாராக இருந்தாலும் மாணவி சகோதரி வித்தியாவின் கொலைக்கு தகுந்த தண்டனை குற்றவாளிகளுக்கு வழக்கப் படும் என உலகம் முழுவதும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது.

s3_Fotor_Collage_Fotor