திராட்சையில் கருப்பு மற்றும் பச்சை திராட்சை என இரண்டு ரகங்கள் உள்ளது. கருப்பு ரகத்தில் பன்னீர் திராட்சை என்று ஒன்று உள்ளது. குறைந்த புளிப்புத்தன்மையுடன் சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதுடன் அதிக மருத்துவ குணமும் இந்த பன்னீர் திராட்சையில் உண்டு.
திராட்சையில் உள்ள குளுக்கோஸ் உயர்ந்த தரம் கொண்டது. இது சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளும்போது நல்ல சர்க்கரையாக மாறி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. ஆஸ்துமா நோயை குணப்படுத்துகிறது. இப்பழம் சேர்த்துக்கொள்ளாமல் ஆஸ்துமா நோயை குணப்படுத்துவது என்பது முடியாத காரியம்.
இருதயத்தை பாதுகாத்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இருதய இரத்த குழாய் அடைப்பு நோயாளிகள் பை பாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் கண்டிப்பாக இப்பழத்தினை சாப்பிட வேண்டும்.
இந்நிலையில், திராட்சை சாப்பிடுவதன் மூலம் பற்களை சிதைவில் இருந்து பாதுகாக்க முடியும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திராட்சையில் ஒரு இயற்கை கலவை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கலவை பற்களை வலிமைபடுத்த உதவுகிறது. மேலும் பற்களின் பில்லிங்கையும் வலிமைபடுத்தும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.