Mohamed Nizous
வாழ விடாதவர்க்கெதிராய்
வாளெடுத்த யுத்தம்
மிரட்டிப் பார்த்தவர்களை
விரட்டி வென்ற யுத்தம்
எண்ணிக்கைப் பலத்தை
நம்பிக்கைப் பலம்
எதிர்த்து வென்ற யுத்தம்
அடிக்க அடிக்க
அமைதியாய் இருந்தவர்கள்
துடிக்கத் துடிக்க
துவம்சம் செய்த யுத்தம்
ஆயிரம் வீரர்களும்
ஆயுதமும் இருக்கென்று
முன்னூறு வீரர் மேல்
முன்னேறிப் பாய்ந்தவரை
பின்னிப் பெடலெடுத்த
பெரு வெற்றி யுத்தம்
தூயோனை அவமதித்து
தூதரையும் அவமதித்த
தீயோரை அழித்தொழித்த
தீரர்களின் யுத்தம்
வாழ விடாதவர்
வாயால் மிரட்டுபவர்
எண்ணிக்கை காட்டி
இம்சை தருபவர்கள்
அடிக்கடி கடைகளை
அடித்து எரிப்பவர்கள்
தூயோனை தூதரை
ஓயாமல் ஏசுபவர்கள்
இன்றும் இருக்கின்றார்
எல்லாம் எரிக்கின்றார்
எதிரியின் தோல்வியை
இறைவன் கொடுப்பான்
இதுதான் பொறுமையாய்
இருக்கச் செய்கிறது….!