கட்டாருடன் கொண்டிருந்த அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்து கொள்வதாக நான்கு மத்தியகிழக்கு நாடுகள் அறிவித்துள்ளமையால் குறித்த பிராந்தியத்தில் பதற்றநிலை தோன்றியுள்ளது.
கட்டார் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு துணைநிற்போருடன் நட்ப்பியல் ரீதியில் பழகுவதாகவும், அவர்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும் மற்றும் இஸ்லாமிய நாட்டு விதிமுறைகளை மீறி செயற்படும் ஈரானுடன் நட்ப்பியல் நாடாக செயற்படுவதாகம் குற்றம் சுமத்தி, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் பக்ரேய்ன் உள்ளிட்ட நாடுகள் காட்டருடனான சகல தொடர்புகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் கட்டாருடனான போக்குவரத்து தொடர்பையும் துண்டிப்பதாக குறித்த நாடுகள் அறிவித்துள்ளதோடு, குறித்த நான்கு நாடுகளிலுள்ள கட்டார் நாட்டவர்களை இரண்டு வாரங்களுக்குள் தமது நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்குறித்த நான்கு நாடுகளும், கட்டாரிலுள்ள உயர்ஸ்தானிகர்களை தமது நாட்டிற்கு திருப்பி அழைத்து கொண்டன. இருப்பினும் குறித்த காலப்பகுதியில் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் தவிர்ந்த ஏனைய போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகள் இயல்பாக இடம்பெற்று வந்தன.
இச்சுழலில் தற்போதைய அறிவிப்பால் காட்டருடன் கொண்டிருந்த சகல விதமான உறவுகளையும் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளதோடு, அந்நாடுகளில் இருக்கும் கட்டார் நாட்டவர்களையும் வெளியேற்றுவதற்கு இரண்டுவாரக்காலம் காலக்கெடு வழங்கியுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முதல், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சவுதிஅரேபியாவிற்கு விஜயம் மேற்கொண்டபோது, முஸ்லீம் நாடுகள் தீவிரவாத செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அறிவித்திருந்த நிலையில், தற்போது காட்டருடனான தொடர்பை மத்திய கிழக்கின் முக்கியமான நான்கு நாடுகள் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.