காற்றில் கார்பன்டை ஆக்சைடு கழிவுகள் அதிகமாக கலப்பதால் பருவ நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பனி ஆறுகள் உருகி கடல் நீர் மட்டம் உயர்ந்து பல தீவுகள் கடலில் முழ்கும் அபாயம் உள்ளது. அளவுக்கு அதிகமாக மழையும், வறட்சியும் ஏற்படுகிறது. கார்பன்டை ஆக்சைடு கழிவுகளை அதிகம் வெளியேற்றும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலீடு உள்ளது. எனவே சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பாரீசில் ஒன்று கூடி பருவ நிலை மாற்றம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர். கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட 17 நாடுகள் அதில் கையெழுத்திட்டுள்ளன.
அதில் கார்பன்டை ஆக்சைடு அளவாக வெளியிடுவது உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் பாரீஸ் பருவ நிலை மாற்றம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இத்தகவலை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
இதன் மூலம் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பறியோவதாகவும், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
டிரம்பின் இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.