நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளதுடன் 86 பேர் காணாமல்போயுள்ளனர்.
குறிப்பாக களுத்துறையில் மாவட்டத்தில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக களுத்துளை மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவித்துள்து.
இந்நிலையில் தெனியாய மொரவகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 12 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாத்தறை மாவட்ட பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
மண்சரிவுகளில் சிக்கிகாணாமல்போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸாருடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.