கொடுங்கோலை நோக்கி நகரும் அரசாங்கம்
ஆட்சிமாற்றத்தை கொண்டுவருவது, புதிய அரசு மக்களுக்கு நன்மை செய்யும் என்பதனாலேயே, ஆனால் இன்று நாட்டின் அரசாங்கம் கொடுங்கோலை நோக்கி நகர்த்துகொண்டுவருகிறது
கடைசி நிலை மக்களுக்கு சேவை செய்யும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை பலவருடங்களாக நடத்தாமல் இழுத்தடிப்பு செய்யும் அரசாங்கம் தனது முகவர்கள்மூலம் தான் விரும்பியவற்றை நடைமுறைப்படுத்துகிறது.
தேர்தலை நடத்தாமல் செயலாளர்களை கொண்டு உள்ளூர்ராட்சி சபைகளை நடாத்தமுடியுமென்றால் நாட்டில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதற்காக அதற்கும் செயலாளர்கள் இருக்கின்ரார்கள்தானே அவர்களிடம் நாட்டிடை ஒப்படைத்துவிடுங்கள், அவ்வாறு செய்யமாடடார்கள் இது மறைமுகமாக மக்கள்மீது கொடுங்கோலை அமுல்படுத்தும் முறையாகும்.
மஹிந்தவின் 10 வருட ஆட்சியில் பெற்ற கடனைவிட அதிகமான கடனை 2 வருடங்களுக்குள் பெற்றுக்கொண்ட அரசாங்கம் எந்தவித உதவிகளையும் மக்களுக்கு செய்யாமல் போலியான காரணங்களை கூறி மக்கள்மீது வரிச்ச்சுமையை அதிகரித்து, சாதாரண மக்களின் வாழ்க்கை சுமையை உயர்த்தி அவர்களை கஷ்டத்துக்குள் தள்ளியுள்ளது, வெளிப்படையாகக எரிபொருள் எரிவாய்வு போன்றவற்றுக்கு விலைகுறைப்பை செய்துவிட்டு ஏனைய பொருட்களின் விலையை அதிகரித்து மக்களை மாயைப் படுத்தி தனது சகாக்களுக்கு சுகபோகங்களை வழங்கி கொடுங்கோலை நகர்த்திக்கொண்டிருக்கிறது .
நாட்டின் வருமானத்தை அதிகரித்து வளப்படுத்த திராணியற்ற அரசாங்க நிருவாகம், தமது பலவீனத்தை மறைக்க முந்திய அரசாங்கத்தின்மீது பழிபோடுவதை தவிர வேறு என்னதான் செய்யமுடியும் இவர்களுக்கு பதவி வேண்டும் ஆனால் வேலைசெய்ய தெரியாது இந்நிலை கொடுங்கோலை நோக்கியே நகரும்.
மகிந்த நாட்டுக்கு நல்லது செய்திருந்தாலும் குடும்ப ஆட்சியும் சிறுபான்மை மக்கள் மீது கடடவிழ்த்து விடப்பட்ட இனவாத குரோத செயட்பாடுகளின் தலைவனை கைது செய்யாமையும் அவரது ஆட்சிக்கவிழ்ப்புக்கு முக்கிய காரணாமாக இருந்தது, இதனை முன்னிறுத்தி அரியணை ஏறிய அரசாங்கம் இனவாத குரோதக்காரர்கள் வெறிபிடித்து வீதியில் அலையும் போது கண்டுகொள்ளாமல் இருப்பது எதனால் என்பதனை மக்கள் இன்னும் அறிந்துகொள்ளாமல் இருக்க முடியாது, ஏனென்றால் ஆட்சிமாற்றம் கொண்டுவர வேண்டும் என்பதற்காக நாடகங்களை அரங்கேற்றியது யார் என்பதனை நாம் இன்றாவது புரிந்துகொள்ள வேண்டும்.
நாங்கள் பலதடவை கூறியுள்ளோம் ரணில் கறையான்மாதிரி சிறுபான்மை மக்களை அடியோடு நசுக்கி விடுவான். விடுதலை புலிகளை இரண்டாக உடைப்பதற்கு திடடம் தீட்டியவன் அவனே அதேபோன்று முஸ்லீம் மக்களை சுட்டு அளிப்பதற்காக விடுதலைப்புலிகளை ஆயுதங்களோடு நடமாடுவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொடுத்தவனும் அவனே, சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மறைந்த தலைவர் அஸ்ரப் மீது கொண்ட கோபத்தினால் பள்ளிகளுக்கு கல் எறிவதனையும் முஸ்லிம்கள்மீது தாக்குதல் நடத்துவதையும் ஆரம்பித்தவனும் அவனே, இப்போது யூத நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து எதிர்கால முஸ்லீம் பெருக்கத்தை தடைசெய்வதற்கு திடடம் தீட்டுவதும் அவனே.
இதனை மக்கள் புரிந்துகொள்வதற்கு சிறிதுகாலம் தேவைப்பட்டது என்பதுதான் உண்மை. பணம் பதவிகளுக்கு சோரம்போகாத தலைவர்களையும் வெட்டினால் கட்சி இரத்தம் ஓடும் என்றநிலை மாற்றத்தையும் மக்கள் வேகமாக நமது நிலைப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஒருமித்த குரலோடு நம் சமூகத்துக்காக எமது குரல்களை உயர்த்த வேண்டும்
எஸ் எம் சபீஸ்