Mohamed Nizous
கண்ணீரும்
‘கம்பளை’யுமாய்
கதறியது குடும்பம்
மாமா என்பவன்
மா-மா பாதகனாய்
கி.மா.க்கு கடத்தினான்
கேட்டான் பெருந் தொகை.
கரடியாய்ப் புகுந்தது
கரடியனாற்று
காவல் துறை.
பிடறியில் பிடித்தது
பிள்ளையைக் கடத்தியவனை.
கைக்கு பணம் வருமென்று
காத்த குடிமகனை
கைது செய்து விசாரிக்கிறார்
கவல் துறை நிபுணர்கள்.
நொச்சிமுனை ஊரிலிருந்து
வெச்ச குறி விபரம் பற்றி
மச்சான் விளக்கும் போது
மிச்சம் வெளியே வரும்
பாவம் செய்வதற்கு
பாலமாய் நின்றார் என
பால முனை சோடி ஒன்று
பட்டிருக்கு இறுதியாய்.
குற்றவாளி யார் யார்
குறுக்கால் மாட்டியது யார்
பெற்ற தகவல்களில்
பெரிதாகத் தெளிவில்லை.
திட்டமிட்ட கொடியோரை
சட்டம் நசுக்க வேண்டும்.
கெட்ட செயல் எனத் தெரியா
கேட்ட செயலை செய்தவர்கள்
சட்டத்தில் பட்டிருந்தால்
சற்றுக் கருணை காட்ட வேண்டும்.