அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபரை கொலை செய்ய திட்டம்..?

வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்கா தனது 2 போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இதனால் கொரிய தீப கற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கை கொல்ல சதி திட்டம் தீட்டியிருப்பதாக வடகொரியாவின் கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

சி.ஐ.ஏ. உளவு நிறுவன இயக்குனர் மைக் மெம்பியோ இந்த வாரத்தில் தென் கொரியா வர இருப்பதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர் தென்கொரியாவின் ‘என்.ஐ.எஸ்’ உளவு நிறுவன தலைவரை சந்திக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் வடகொரிய அதிபரை கொல்ல சதி திட்டம் தீட்ட உள்ளனர்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு நிறுவனத்தினர் வட கொரியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுருவ செய்ய உள்ளனர். அவர்கள் மூலம் ரசாயன ஆயுதங்கள் மற்றும் பொருட்கள் மூலம் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.