முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி வரிஅறவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை: நாமல்

 

முஸ்லிம்களின் தாடிக்கும்  தொப்பிக்கும் நல்லாட்சி வரி அரவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

மே தின கூட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட முஸ்லீம்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் ..

முஸ்லிம்களின் வாக்குளை கொள்ளையடித்து ஆட்சிக்கு வந்த நல்லாட்சி இன்று அவர்களின் வயிற்றில் அடிக்க ஆரம்பித்துள்ளது.என்றும் இல்லாத மாதிரி இன்று ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் 25000 பதிவுக்கட்டணம் அறவிடப்படுகிறது.

இனவாதிகள் எவற்றையெல்லாம் செய்ய வேண்டுமென பல வருடங்களாக கூவித் திரிந்தார்களோ அவைகள்அத்தனையும் இன்று மிக அழகிய முறையில் திட்டமிடப்பட்டு அரச அங்கீகாரம்பெற்றுஇடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

நோன்பு மாதம் வருவதை அறிந்து இவ்வரசு பேரீச்சம் பழத்தின் மீதான வரியை அதிகரித்துள்ளது.இதனைஇவ்வாட்சியாளர்களுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது.இவ்விடயமானது இவ்வாட்சியாளர்கள்முஸ்லிம்களை புறந்தள்ளி பயணிப்பதை எடுத்துக் காட்டுகிறது.

முஸ்லிம்கள் நோன்பு காலங்களில் பேரீச்சம் பழத்தை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு இவ்வரசு உதவுசெய்யும் பொருட்டு அதன் விலையை குறைத்து வழங்க வேண்டும்.நாம் எமது காலத்தில் அவ்வாறுதான்செய்தோம்.அனைத்து முஸ்லிம்களும் அவர்களுக்கு தேவையானளவு பேரீச்சம் பழத்தை கொள்வனவு செய்வதைஇவ்வரசு உறுதி செய்ய வேண்டும்.அவ்வாறில்லாமல் இலங்கை அரசு பேரீச்சம் பழத்தின் வரியைஅதிகரித்துள்ளமையானது எவ் வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

ஆட்சியில் சில இனவாத செயற்பாடுகள் தலைதூக்கிய போது மெளனமாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் இப்போதும் மௌனமாக இருப்பது வேடிக்கையானது.இந்த நேரத்தில் நீங்களாவது பேசுங்கள் என எமது முஸ்லிம் சகோதரர்கள் எம்மிடம் கோரிக்கை முன்வைக்கிறார்கள் .

மஹிந்த பட்ட கடனை செலுத்தவே பேரீத்தம் பழத்துக்கு  வரி அதிகரிப்பதாக கூறி முஸ்லிம்களை மேலும்முட்டாள்களாக்க வாய்ப்புள்ளது எனவும் எதிர்காலாத்தில் முஸ்லிம்களின் தாடிக்கும் தொப்பிக்கும் நல்லாட்சி வரிஅறவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனவுன் அவர்  மேலும் குறிப்பிட்டார்.