உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய் ஏராளமானோரை தாக்கி உயிர் பலி வாங்கி கொண்டு இருக்கிறது.
இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. எனவே எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டவர்கள் மரணத்தை சந்திப்பதை தவிர வேறு வழியில்லை.
இந்த நோயை குணப்படுத்த மருந்து கண்டு பிடிக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வந்த போதிலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் சிகிச்சை முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் மற்றும் பீட்டர் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் இது சம்பந்தமாக ஆய்வுகள் மேற்கொண்டனர்.
எலி உடலில் எய்ட்ஸ் கிருமியை செலுத்தி அதை குணப்படுத்தும் வகையில் சிகிச்சையை மேற்கொண்டனர்.
மனிதனின் மரபணுவில் சில மாற்றங்களை கொண்டு அந்த அணுவை எலியின் உடலில் செலுத்தி எலியின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி எலி உடலில் இருந்த எய்ட்ஸ் கிருமிகளை அவை முற்றிலும் அழித்து விட்டன.
மனிதனின் உடலில் புகும் எய்ட்ஸ் கிருமிகள் முதலில் எச்.ஐ.வி. கிருமியாக இருந்து பின்னர் அவை வளர்ந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குகின்றன.
இந்த மரபணு சிகிச்சை மூலம் எச்.ஐ.வி. கிருமி உடலில் வளரும் போதே அவற்றை அழித்து விடலாம் எனவே எய்ட்ஸ் நோய் உருவாவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய் விடும். இதனால் உயிர் இழப்புகளை தடுத்து விடலாம்.
விரைவில் இந்த மருத்துவ முறையை மனிதனிடம் சோதனை நடத்தி நடைமுறைக்கு கொண்டு வர உள்ளனர்.