ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று…

அஷ்ரப் ஏ சமத்

இலங்கை இஸ்லாமிய நிலையமும் சவுதி அரேபியா  இஸ்லாமிய விவகார அமைச்சின் தஹ்வா அமைப்பும் இணைந்து ஆசிய நாடுகளின் 40 நாடுகள் பங்கு கொள்ளும் சர்வதேச மாநாடு இன்று கொழும்பு அலறி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மாநாடு இஸ்லாமிய யதாத்தமும், அதற்கான சவால்களும் என்ற தலைப்பில் நடாத்தப்படுகின்றது. ஆரம்ப வைபவத்தில் இஸ்லாமிய தலைவர்  ஹூசைன் முஹம்மத், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, முஸ்லீம் சமய தபால் அமைச்சர்  எம்.எச். ஏ ஹலீம், இந்தியாவின் ஜம்மியத்துல் உலமா தலைவர்  அர்சத் மதனி சவுதி அரேபியாவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய இஸ்லாமிய விவகார ஆலோசகருமான காலாநிதி அப்துல் அசீஸ் அல்-அமநார்   சபாநாயகார் கருஜயசுரிய, ஜனாதிபதியும் இங்கு உரையாற்றினார்கள்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா
இஸ்லாமிய நாட்டுப் பிரநிதிகள் இலங்கையில் இம்மாநாட்டினை நடாத்துவதையிட்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும், அரபு பிரநிதிகளை நான் மனவுவர்ந்து வரவேற்பதாகவும் தெரிவித்தார். நபி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனைகளை பின்பற்றியும் அல் குர்ஆண் வழியில் தமது போதனைகளையும் நல்ல சிந்தனைகள் அடிப்படையில் உலகில் வாழும் முஸ்லீம்கள் வாழ்கின்றனர்.  உலகில் மனிதர்கள் குண்டுகளால் கொலைசெய்யப்படுகின்றனர். நாம் குண்டை பயண்படுத்தியவனை குறை கூறாமல் அதனை உற்பத்தி செய்து அதனை விற்பவனுக்கே நாம் எதிர்க்கின்றோம்.  இலங்கையில் உள்ள மதங்களான இஸ்லாம் – குர் ஆண்,  கிரிஸ்த்துவம் -பைபில், ஹிந்து -பகவத் கீத, பௌத்தம் – திரவிட்டே போன்ற ஆத்மீக ரீதியில் மனிதர்களை ஒன்றுபடுத்துகின்றனர்.  அரசிலய் கட்சிகள் அரசியல்வாதிகளது ஆலோசனைகளை விட நாம் ஆத்மீகவாதிகளின் ஆலோசனையை கேட்டே செய்படுபவன்.
இந்த நாட்டில் சுதந்திரம் கிடைத்தவுடன் அதற்காக சகல இனத்தவர்களும் இணைந்து பிரிட்டிசாரிடமிருந்து சுதந்திரத்தினைப் பெற்றோம்.  இந்த நாட்டில் வாழும் முஸ்லீம் ஹிந்து பௌத்தம் கிரிஸ்த்துவ மக்கள் சகலரும் ஜக்கியமகாவும் சமாதானமாகவும் வாழ்ந்து வருகின்றனர். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தெரிவித்தார்.