அமைச்சர் றிஷாத் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராக மாறிவிட்டார்….

                மு.காவினரின் அச்சத்தால் உச்சம் தொட்ட அமைச்சர் றிஷாத்

அமைச்சர் றிஷாத் துரித வளர்ச்சி கண்டமைக்கு பல காரணங்கள் இருப்பினும் மு.காவினர் அமைச்சர் தங்களுக்கு போட்டியாக வளர்ந்து விடுவாரோ என அஞ்சியமை அவரின் வளர்ச்சிக்கான பிரதான காரணமாகும்.

இன்று மு.காவின் போராளிகள் மாணிக்கமடு விடயத்தில் அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென்பது போல கருத்து வெளியிட்டு வருகின்றனர்.இதனூடாக அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை எழும் போது அங்கு சென்று தீர்த்துவைக்க வேண்டும் என்ற மனோ நிலையை அவதானிக்க முடிகிறது.இம் மனோ நிலையானது அமைச்சர் றிஷாத் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டிய தலைவர் என்பதை எடுத்து காட்டுகிறது.

வில்பத்து பிரச்சினைகளின் போது வடக்கை பிறப்பிடமற்ற அமைச்சர் ஹக்கீம் தலையிட வேண்டுமென இலங்கை முஸ்லிம்கள் விரும்பியிருந்தனர்.ஆனால்,தே.கா என்ற கட்சியின் தலைவர் அமைச்சராக இருந்த போது அவரின் தலையீட்டை பெரிதும் எதிர்பார்க்கவில்லை.காரணம் தே.காவின் தலைவர் இலங்கை மக்களின் அங்கீகாரம்பெற்ற தலைவராக மக்கள் அங்கீகரிக்கப்பட வில்லை என்பதாகும்.

அது போன்றே இறக்காம சிலை வைப்பின் போது அமைச்சர் றிஷாத் தலையிட வேண்டுமென மு.காவின் போராளிகள் உட்பட அனைவரும் விரும்புகின்றனர்.இச் சேதியானது அமைச்சர் றிஷாத் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவராக மாறிவிட்டார் என்பதை பறைசாட்டி நிற்கின்றது.

இப் பிரச்சினையை மு.காவினாலேயே தீர்க்க முடியும்.அமைச்சர் றிஷாத்தால் தீர்க்க முடியாது.அவர் இதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்ற வகையில் அவரை புறக்கணித்து சென்றிருந்தால் அவர் இந்தளவு உச்சத்தை தொட்டிருக்க மாட்டார்.அவர் வன்னிக்குள் செயற்பட்ட போதே அவர் மீது கொண்ட அச்சத்தால் மு.காவினர் அவரை விமர்சிக்க தொடங்கினர்.அவருக்கு இலவச விளம்பரம் வழங்கியிருந்தனர்.அவர் மக்களிடையே இலவசமாக சென்றடைந்தார்.

தொடரும்…

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.