நாட்டில் மே மாதத்தின் இறுதி வரையில் உஷ்ணமான காலநிலை நிலவும்

 

 இலங்கையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் உஷ்ணமாக காலநிலை அடுத்த மாதம் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதத்தின் இறுதி வரையில் இந்த நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிக உஷ்ணமாக காலநிலை காரணமாக நாட்டின் ஊடாக செல்லும் காற்றின் அளவு குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின பிரதி பணிப்பாளர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் கொண்டுள்ளமையால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த காலநிலையின் போது விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வோர் காலை நேரங்களில் பங்குப்பற்றுவது குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என வைத்தியர் லால் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகளவான உஷ்ணம் காரணமாக பல்வேறு விதமான நோய்களுக்கு மக்கள் முகங் கொடுத்துள்ளனர். அதிகளவானோருக்கு கண்கள் தொடர்பான வியாதிகள் வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஏற்கனவே புதிய வகை வைரஸ் தொற்றினால், பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உஷ்ணமான காலநிலை மேலும் ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது.