கும்பிடாத அஷ்ரப் ,ஹஸனலி, பஷீர்

 

ஹக்கீம் மீதான அதிருப்திகளும், மோசமான விமர்சனங்களும் அதிகரிக்கும் காலமிது என சொல்வதைவிட கிழக்கில் ஹக்கீம் காங்கிரசுக்கு மக்களின் ஆதரவு பூச்சியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது      என்று சொல்வது மிகப்பொருத்தமாக இருக்கும். ஹக்கீமின் பெயரில் பல எழுத்துப் பிழைகளும், பல களங்கங்களும்   காணப்படுவதே இதற்கு காரணமாகும். புதுப் பணக்காரனுக்கு தனது தவறுகளை மறைக்க புத்தி வேலை செய்யாதபடி மூளை  மழுங்கிவிடும்    என்பார்கள் மூச்சு முட்ட பணம் கிடைத்த ஹக்கீமின் விடயத்திலும் தலை கால் புரியாது  இது தான்  நடந்தது.  மக்களை     பொறுத்த வரையில் ஹக்கீம் துருப்பிடித்த இரும்பாகி விட்டார்.  அண்மையில் கல்முனையில் நடைபெற்ற ஹக்கீம் காங்கிரசின் கூட்டத்திற்கு செய்யப்பட்ட செலவிற்கு ஏற்ப சேர்க்கப்பட்ட  மக்களின் வருகை காணப்படவில்லை. வந்திருந்த மக்களும் சத்தியத்துடனான சமகால விளக்கங்களை ஹக்கீமில்  எதிர்பார்த்து  தோல்வி கண்டத்துடன், ஹக்கீமும் பேசமுடியாது  அதிருப்தியுடனேயே காணப்பட்டார். ஆனால் ஹஸனலியின் நிந்தவூர் கூட்டத்துக்கு இதனையும் விட அதிகமான மக்கள் தானாக சேர்ந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் ஹஸனலியின் பொத்துவில் கூட்டத்தில் மக்கள் அமைதியுடன் கலந்து கொண்டனர். ஆனால் ஹக்கீம் காங்கிரசின் பொத்துவில்   கூட்டத்தில்  மக்கள் அமைதியின்மையுடன் கலந்து கொண்டதையும், அம்பாறையில் உள்ள 7 க்கும் மேற்பட்ட போலீஸ் பிரிவுகளில் இருந்து கலகத்தடுப்பு போலீசார் கொண்டு வரப்பட்டு அவர்களின் பாதுகாப்பில் கூட்டம் அவசர அவசரமாக நடத்தி முடிக்கப்பட்டதையும்   காணலாம்.    இவைகள் ஹக்கீம் காங்கிரசின் கள நிலவரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 

மர்ஹூம் அஷ்ரபினால் சமூகத்தை மேம்படுத்தும்  செதுக்குதல்களே அதிகமாக  காணப்பட்டது. ஆனால் ஹக்கீம், நசீர் அஹமத் போன்றோர்கள்    தங்களை முன்னேற்றிக் கொள்ள    தங்களையே செதுக்கும் போது சிதறியவைகள் பட்டு வயிறு வளர்த்தவர்கள் பலரிருந்தும் அதில்   ஜவாத்தும் மஞ்சள் டீசேர்ட் அணியாத ஹக்கீம் காங்கிரசின் ஒரு போக்காளிதான்   என்பதை மர்ஹூம் அஷ்ரபை விமர்சித்து வெளிக்காட்டினார். செய்த சேவைகளுக்கு, அபிவிருத்திகளுக்கு மர்ஹூம் அஸ்ரப் அவரது பெயரை வைத்தது பிழையான விடயமென அதிர்வில்  ஹக்கீம் அன்று சொன்னார்,  தீகவாபியில் மர்ஹூம் அஸ்ரப் கும்பிட்டது பிழையில்லையெனின் ஹக்கீம் கும்பிடுவதும் பிழையில்லையென  ஜவாத் இன்று சொல்கிறார்.  அன்று வெள்ளைக்கிழமை தீகவாபியில்  கையில் கொடுக்கப்பட்ட மலர்த்தட்டினை கீழே வைத்த மர்ஹூம் அஸ்ரப் அந்தப் பன்சலையிலேயே  இமாம் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்றியதை யாரும் மறக்க மாட்டார்கள், மர்ஹூம் அஸ்ரப் கும்பிட்டார் என்பது பொய்யாகும். இன்று   மர்ஹூம் அஷ்ரபின் பெயரை களங்கப்படுத்தி விற்றாவது அரசியல் செய்ய துணிந்தவர்கள் இனி மக்களைப்பற்றி   ஒரு போதும் யோசிக்கமாட்டார்கள் என்பது உறுதியாகின்றது. ஒரு சந்தர்ப்பத்தில் தங்கக் கடத்தல் விடயத்தில் மாட்டிக் கொண்ட ஜவாத்தை உடனடியாக கட்சியை விட்டு வெளியே வீசியெறிந்த மர்ஹூம் அஷ்ரபை    பழி வாங்குவதற்காகவும், ஹக்கீமுக்கு  வக்காலத்து வாங்குவதற்காகவும் மர்ஹூம் அஸ்ரப் கும்பிட்டார் என பேசிய ஜவாத்  ஒரு உண்மையான கட்சிப்  போராளியாக  இருக்க முடியாது நடித்து அனைவரையும் ஏமாற்றியுள்ளார்.

 

 மூன்று வகைப்படும் றித்தத்தில் கும்பிடுவது செயல் சார்ந்த றித்தத்தாகும். குர் ஆணையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்ட கட்சியின் தலைவர் கும்பிடுவதும்,  நசீர் அஹமத் சிலைக்கு மாலை போட்டதும்  பிழையான விடயமே. இவர்கள் அல்லாஹ்வின் மேல் பயமற்றவர்கள், மக்கள் தான் இவர்களிளிடமிருந்து தங்களைப்  பாதுகாக்க  கவனமாக இருக்க வேண்டும்.  இணை வைப்பவர்களுக்கு துணையாக இருந்து, மர்ஹூம் அஷ்ரபினையும் இழிவு படுத்திய ஜவாத் இனி எந்த முகத்தோடு தேர்தலில் வாக்கு கேட்டு,  இவருக்கு பாடம் புகட்ட  காத்திருக்கும் மக்கள் முன் தோன்றுவார். ஏற்கனவே தொங்கித்தான் மாகாணசபைக்குப் போனார், இனி கெஞ்சினாலும் எங்கும் போக முடியாது. ஹக்கீம் காங்கிரஸ் இன்று மக்களை நம்பவில்லை, பணத்தை அள்ளி வீசி மக்களை முட்டாளாக்கி   இலகுவாக வென்றுவிடலாம் என பணத்தை நம்புகிறார்கள், அதில் ஜவாத் முன்னணியில் உள்ளார். இவர் நம்புகின்றவர்களே இவருக்கு ஆப்பு வைக்க அவ்வளவு நாட்கள் எடுக்காது  இப்படி நம்பியவர்களுக்கு இதை விட மோசமான ஆப்புக்களெல்லாம் அடிக்கப்பட்டுள்ளதை ஜவாத் நினைவு கூறும் நாள் தொலைவிலில்லை.

 

கிழக்கின் தந்தை ஹஸனலியை  முஸ்லீம் காங்கிரசின் மர்ஹூம் அஷ்ரபிற்கு  அடுத்த தளபதியாகவே  மக்கள் இன்று பார்ப்பது  நாளைய கரையோர மாவட்டத்தினை பெற்றது போன்ற உணர்வை   இன்றைய முன்னேற்றம் காட்டுகின்றது அப்போது மர்ஹூம் அஷ்ரபின் பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்திய ஜவாத் போன்றவர்களின் நிழலும் மக்கள் முன் நிற்க முடியாது அழிந்து போகும் .

 

அப்படிப்பார்த்தால் இது வரை கும்பிடாத  ஹஸனலி, பஷீர் சேகுதாவூத் போன்றோர் ஹக்கீம் காங்கிரஸ் அணியை விட சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும் 

 

அமீர் மௌலானா