மிஸ்பா உல் ஹக்கினை தொடர்ந்து யூனிஸ்கானும் ஓய்வு பெறுகின்றார்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மிஸ்பா மற்றும் யூனிஸ்கான் ஆகிய இரண்டு பேரும் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். 40 வயதை தாண்டியுள்ள மிஸ்பா உல் ஹக் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் யூனிஸ்கானும் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து யூனிஸ்கான் கூறுகையில் ‘‘என்னுடைய தலை நிமிர்ந்து நிற்கும் வகையில் கம்பீரத்துடன் நான் ஓய்வு பெறப் போகிறேன். இதுதான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என்று நினைக்கிறேன். எந்தவொரு வீரரும் இந்த முடிவைத்தான் எடுப்பார்கள்’’ என்றார்.

17 வருடமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வரும் யூனிஸ்கான், 115 போட்டியில் 34 சதங்கள் விளாசியுள்ளார். 10 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் 23 ரன்கள்தான் தேவை. இந்த ரன்னைத் தொட்டதும் 10 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் 13 வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

பாகிஸ்தான் – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது.