இந்தியாவில் நடக்கும் பத்தாவது ஐபிஎல் தொடர் தான் மலிங்காவும் எதிர் வரும் ஐசிசி சாம்பியன் கிண்ணத்தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்க உள்ளது.
வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
இதற்காக ஏனைய நாடுகளைச் சேர்ந்த வீரர்களின் தேர்வாளர்கள் சிறப்பான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக, அணியின் வீரர்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் சபையின் மேலாளர் அசங்க குருசிங்க கூறுகையில், வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் மலிங்காவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இருப்பினும் எதிர்வரும் சாம்பியன் டிராபி தொடர் 50 ஓவர் போட்டிகள் என்பதால், அவர் அதிக ஓவர்கள் வீச வேண்டி இருக்கும்.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர் மீக நீண்ட தொடர் என்பதால், குறைந்தது 16 போட்டிகள் விளையாட வேண்டி இருக்கும். அதில் அவர் அதிக ஓவர்கள் வீச வேண்டி இருக்கும்.
இதில் அவரது செயல்பாடு தெரிந்துவிடும், இதனால் இத்தொடரில் மலிங்காவின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மலிங்கா சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஐசிசி சாம்பியன் தொடரில் இலங்கை அணியில் மலிங்காவுக்கு இடம் கிடைப்பது உறுதி.