தமது ஒப்பந்த முறைக்கமைய ஹம்பாந்தோட்டை திட்டம் செயற்படுத்தப்பட்டால், அதற்கு ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையை இணைத்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தான் தொடர்பில் போலி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். ஏன் இப்படி பொய்யான விடயங்களை கூறுகின்றார்?
ஹம்பாந்தோட்டை விற்பனை செய்யும் யோசனை என்னிடம் காணப்பட்டதில்லை.
ஹம்பாந்தோட்டை நான் பிறந்த மாவட்டம். எங்கள் முறைக்கமைய இந்த ஒப்பந்தம் செயற்படுத்தப்பட்டால் நான் அதற்கு ஆதரவு வழங்குவேன்.
மே தினத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் பலத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம். கொழும்பிற்கு ஒன்றரை லட்சத்திற்கு அதிகமானோரை அழைத்து வருவோம்.
இம்முறை மே தின பேரணி நடத்துவதற்கு எங்களுக்கு காலி முகத்திடல் கிடைத்துள்ளது. அன்னைய தினம் நான் விசேட அறிவிப்பொன்றை வெளியிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.