Video – பேயோட்டுவதற்கு எதிராக இலங்களை உலமாக்கள் -( பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 4 )
குற்றமிழைத்தவர் மாளிகையில் பஞ்சமிர்தம் உண்டு மஞ்சணையில் துயிலும் மஹாராசனென்றாலும் சரி,குடிசையில் கம்பங்களி தின்று கட்டாத்தரையில் கண்ணயரும் ஏழையென்றாலும் சரி,குற்றம் குற்றமேதான்.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமேதான்.
முஸ்லீம் காங்கிறசின் தேசியத்தலைவர் அகீதா ரீதியாக நெறிபிறழ்ந்தவர் என்பதற்கு மூன்று வகையான காரணங்களை நான் கூறியிருந்தேன். காபிர்களின் தெடிமுண்ட தெய்வம் உருவேறியிருக்கும் பெண்ணைக் கூட்டி வந்து குமாரி கூரேயின் ஆவியை விரட்டியமை, குமாரியைத் தன்னை விட்டுப் பிரிக்க ராகமையின் லொகு சீயாவிடம் சென்று முட்டைகளைக் கொண்டு சூனியம் செய்தமை,எண் கணிதத்தில் அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றமை என்பவையாகும்
.
இப்படிப்பட்டவர் ஒரு முஸ்லீம் சமூகத்திற்கு தலைமை தாங்க முடியாது.அகீதா பிறழ்ந்த ஒரு விபச்சாரனின் தலைமையின் கீழ் இருக்கும் முஸ்லீம் சமூகத்தை அல்லாஹ் ஒரு போதும் வெற்றிபெறச் செய்யமாட்டான் என்பதுதான் முடிவு. முடியுமானால் காங்கிறசின் கட்சித் தலைவரோ தொண்டரோ தலைவர் இவைகளைச் செய்யவே இல்லை என்று மறுக்கட்டும்.
தன் கட்டில் ஆடியதற்காக காபிர்களின் தெய்வம் உருவேறியிருக்கும் பெண்ணைக் கொண்டு பேயை ஒருவர் விரட்டினால் அவரின் நிலைப்பாடு இஸ்லாத்தில் என்ன என்பது சம்பந்தமாக நான் இலங்கையின் பிரபலமான உலமாக்களிடம் வினவினேன்.அவர்களின் கருத்துக்களை இங்கே இணைக்கப்பட்ட வீடியோவில் காணலாம். அனைவரும் அதனை இணைவைப்பு என்றே கூறினார்கள்.முஸ்லீம் காங்கிறசின் தலைமையகத்தில் மாதாந்த பயானை நிகழ்த்தும் மௌலவி ஸைத் நூறாமித் அவர்களின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது.
ஒன்றைத் தெளிவாகச் சொல்லிக்கொள்ளவேண்டும்.நான் பேசிய எந்த உலமாக்களிடமும் நான் ஹக்கீம்தான் இவற்றை எல்லாம் செய்தார் என்று கூறவில்லை.’ஒருவர் செய்தார்’ என்றே கூறினேன்.ஹக்கீமின் செயற்பாடு பற்றித்தான் நான் கேட்கிறேன் என்றோ ஹக்கீம் இவ்வாறு நடந்து கொண்டார் என்று அவர்களுக்கு எதுவுமே தெரியாது. இப்படியான ஒரு செயலைச் செய்பவரின் நிலை இஸ்லாத்தில் என்ன என்று மட்டும்தான் அவர்கள் கூறினார்கள்.அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை.ஹக்கீம் என்றாலும் சட்டம் ஒன்றுதான் என்பதால் ஹக்கீமின் பெயரைச் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ராசி முஹம்மத் ஜாபீர்