விமல் வீரவங்சவின் புதல்வியின் சுகவீன நிலைமையை விசேட விடயமாக கருதி பிணை வழங்க கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு பிணை கோரி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் பிணை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விமல் வீரவங்சவின் சட்டத்தரணிகள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

விமல் வீரவங்சவின் புதல்வி மன உளைச்சலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் புதல்வியின் சுகவீன நிலைமையை விசேட விடயமாக கருதி நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

இந்த பிணை கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் லங்கா ஜயரத்ன, கோரிக்கை தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வழங்குவதாக கூறியுள்ளார்.

தனக்கு பிணை வழங்குமாறு கோரி விமல் வீரவங்ச கடந்த புதன் கிழமை முதல் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.