பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது

லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து புதனன்று இரவு முதல் ஆறு வீடுகளில் சோதனை நடத்திய லண்டன் காவல்துறை சந்தேகத்தின்பேரில் ஏழு பேரை கைது செய்திருப்பதாக பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் உயரதிகாரி மார்க் ராவ்லி தெரிவித்துள்ளார். 

லண்டன் மெட்ரோபாலிட்டன் காவல்துறையின் பொறுப்பு துணை ஆணையராகவும் பதவி வகிக்கும் இவர் இதுபற்றி மேலும் கூறுகையில்,

லண்டன், பர்மிங்ஹாம் மற்றும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் நேற்றிரவு தொடங்கி தொடர்ந்து புலனாய்வு செய்துவருவதாக தெரிவித்தார்.

தாக்குதலாளி சர்வதேச பயங்கரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 29 பேரில் ஏழு பேரில் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி-BBC