பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில் தீவிரவாதிகள் காரில் பயணம் செய்வதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த கார் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்கியது.
அதில் பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய தீவரவாதி குவாரி முகமது யாசின் கொல்லப்பட்டான். இன்உஸ்தாத் அஸ்லம் என்றும் அழைக்கப்பட்டு வந்தான். இவன் லஸ்கர்-இ-ஹாங்வி என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் தற்கொலை படை தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வந்தான்.
பாகிஸ்தான் லாகூரில் கடந்த 2009-ம் ஆண்டு விளையாட வந்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பஸ்சில் வெடி குண்டு தாக்குதல் நடத்தியவன் இவன் தலைக்கு அமெரிக்கா 19 ஆயிரம் டாலர் விலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது .