தாழுகின்ற கப்பலுக்குள் தான் இருப்பதனை தம்பி ஹரீஸ் புரிந்துகொள்வார்: Dr. ஏ. உதுமாலெப்பை
முஸ்லிம் சமூகத்தின் மூத்தபோராளிகளையும் புத்திஜீவிகளையும் அரசியல் ஆர்வலர்களையும் ஒன்றுகூடுமாறுதேசியகாங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமானஅல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லாஅவர்களின் அழைப்புவரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்ததும் அவசரஅவசியமானதுமாகும். குறுகியஅரசியல் நோக்கைக் கொண்டு இவ்வழைப்பினைமக்கள் நிராகரிக்குமாறுகோருவதுதம்பி ஹரீஸின் அரசியல் முதிர்ச்சி இன்மையையேகாட்டுகின்றது.
தமிழ்பேசும் மக்களின் அரசியல் விடுதலைக்காகதந்தைசெல்வா,அமிர்தலிங்கம்,சிவசிதம்பரம் போன்ற மூத்ததலைவர்களுடன்அரசியற் செயற்பாடுகளில்ஈடுபட்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்கான தூதினைதலைவர் அஷ்ரஃப் அவர்களோடுசேர்ந்தும்சுமந்தும்அதற்காகஉழைத்தவன் என்றவகையில் இந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்களின் அரசியல் விடுதலைக்கானஅமைச்சர் அதாஉல்லாவின் முன்னெடுப்பு இன்றியமையாததுஎன்பதனைபதிவிடவிரும்புகின்றேன்.
ஆகையினால் இவ்வரலாற்றுத் தேவைக்காகஒன்றுகூடுமாறுமுன்னாள் அமைச்சர் அதாஉல்லாஅவர்கள் விடுத்திருக்கின்றஅழைப்பினை முஸ்லிம் சமூகத்தின் மூத்தஅரசியல் தலைமைகளும்,சமகாலஅரசியற் செயற்பாட்டாளர்களும், இளைஞர்கள்,உலமாக்கள்,புத்திஜீவிகளும் மனமுவந்துஏற்றுக் கொண்டு இதற்கு இதயசுத்தியாகஒத்துழைப்பைவழங்கவேண்டும் எனவும் கோருகிறேன்.
நான் இன்றுமரணித்தாலும் எனக்குக் கவலையில்லை. அடுத்ததலைவன் யார் என்பதனைஅதாஉல்லாவின் பேச்சில் நான் கண்டுகொண்டேன். அல்ஹம்துலில்லாஹ் என்றுஅக்கரைப்பற்றில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பல்லாயிரக்கணக்கானமக்கள் மத்தியில் பகிரங்கமாக கூறியிருந்தமேடையில் நானும் சாட்சியாக இருந்தேன். இன்னும் இது பற்றிப் பேசியசந்தர்ப்பங்களுமுண்டு.தலைவர் அஷ்ரஃப் அவர்களால் நம்பிக்கைவைத்துபேசப்பட்ட இந்த மூத்தபோராளிஅதாஉல்லாஅவர்கள் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பலதடயங்களைஏற்படுத்தியிருக்கின்றார். அவைகளும்நமதுவரலாறாகும். அப்படிப்பட்ட மூத்தபேராளி இன்றுசமூகத்தின் விடுதலைக்காய் முன்னின்றுஅழைப்புவிடுப்பதுபொருத்தமானதும் ஆரோக்கியமானதும் என்பதனை இங்குநான் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
மேலும் தலைவர் அஷ்ரஃப் அவர்களோடுநேரடியாகசுமார் ஒருதசாப்தகாலத்திற்கும் மேலாகஅரசியல் பாசறையில் புடம்போடப்பட்டுஅவரதுகொள்கைக் கோட்பாடுகளில் இருந்துஅணுவளவும் பிசகாது 30 வருடங்களாகசமூகவிடுதலைக்காகபோராடிவரும் தலைவர் அதாஉல்லாவை, முஸ்லிம் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் முதலும் முடிவும் தெரியாமல் பாராளுமன்றம் செல்வதற்காகமாத்திரம் முஸ்லிம் காங்கிரஸைப் பாவித்துக் கொண்டிருக்கும் தம்பி ஹரீஸ{ம் அவர் போன்றோரும் கேள்விகேட்பதுசிறுபிள்ளைத்தனமானதாகும்.
இன்றையஅரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களுக்கெதிரானபுறச்சக்திகளின் ஆளுகைக்குட்படாது,பணத்திற்கும் பதவிகளுக்கும் சோரம் போகாமல் ஆணித்தரமானஅரசியல் தீர்மானங்களைமேற்கொண்டவர் அதாஉல்லா. முஸ்லிம்கள்;, இந்தநாட்டின் மீதுவைத்திருக்கின்றவிசுவாசத்தையும் பெரும்பான்மைசமூகம் முஸ்லீம்கள் மீதுவைத்திருக்கின்றநல்லெண்ணத்தையும் பாதுகாக்கவேண்டும் என்கின்றயதார்த்தத்திற்காகஅரசியல் நிலைப்பாடொன்றினைஎடுத்துஅதன் மூலம் தனதுபாராளுமன்றஉறுப்புரிமையையும் அமைச்சுப் பதவியையும் இழப்பதற்குத் துணிந்தவர். இது முதலாம் முறைஅல்ல. இதற்குமுதலும் பிரதிஅமைச்சுப் பதவியையும்,பாராளுமன்றஉறுப்புரிமையையும் முறையே இராஜினாமாச் செய்தும் காலத்தைச் சுருக்கியும் வரலாற்றில் தடம் பதித்தவர்.
முஸ்லிம்களுக்கெதிரானபுறச் சக்திகளின் ஆளுகைக்குட்பட்டஊடகங்களினாலும்,பணத்திற்கும் பதவிக்கும் தனிப்பட்டவிருப்புவெறுப்புக்கள் என்பவற்றிற்கும்விலைபோன முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் முஸ்லிம் சமூகம் பிழையாகவழிநடாத்தப்பட்டபொழுதுகளிலெல்லாம் தலைவர் அஷ்ரஃப் அவர்களைப்போலவேமிகஆழமாகசிந்தித்துநிதானித்துபக்குவமாகநிலமைகளைகையாண்டஒருதலைமகன்தான் அதாஉல்லாஅவர்கள்.
எனவே,தலைவர் அதாஉல்லாஅவர்களின் அழைப்பைஏற்று முஸ்லிம் சமூகத்தின் புத்தி ஜீவிகளும் முதிர்ந்தஅரசியற் தலைமைகளும் அரசியற் வேறுபாடுகளுக்கப்பால் சமூகத்திற்காய் சிந்திப்பதற்குஒன்றாய்அணிதிரளஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கோடிகளும் சீடிகளும் பற்றியகதைகள் உலாவுகின்ற இந்தகாலகட்டத்தில் தனதுபதவியைமாத்திரம் காப்பாற்றிக் கொள்வதற்காக ஹக்கீமுடன் கைகோர்த்துள்ளதம்பி ஹரீஸ_ம் அவரைப் போன்ற இன்னும் சிலரும் அதாஉல்லாவுக்குஎதிரானகருத்துக்களைமுன்வைப்பதை இந்தசமூகம் ஏற்றுக் கொள்ளமாட்டாதுஎனநினைக்கிறேன். இன்னும் தாழுகின்றகப்பலுக்குள் தான் இருப்பதனைதம்பி ஹரீஸ் புரிந்துகொள்வார்