ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மீண்டும் பாடசாலைக்குத் திரும்புதல்’ நிகழ்வு இன்று (19.03.2017)இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ளூஇப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் கலந்து கொண்டதுடன் பாடசாலையில் அதிபர்களாக ஆசிரியர்களாக ஏற்கனவே கடமையாற்றியவர்களும் கலந்து கொண்டனர்.
பழைய மாணவர்களாகக் கலந்து கொண்டவர்கள் வெள்ளை நிற சேட்டும் கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்து வருகை தந்ததுடன் காலை 07.30 மணிக்கு பாடசாலையில் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கடமையாற்றியவர்கள் அதிதிகளாக வரவேற்கப்பட்டதுடன் அதன் பின்னர் காலை ஆராதனை இடம் பெற்று உடற்பயிற்சியும் இடம் பெற்றதுடன் வகுப்பறையில் பழைய மாணவர்களது நினைவு மீட்டலும் இடம் பெற்றதுடன் பழைய மாணவர்களது மாணவர் மன்றம் இடம் பெற்றதோடு முன்னாள் அதிபர்களும் கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எம்.ச்.எம்.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரான கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வைத்தியர்கள், இலங்கை நிருவாக சேவை அதிகாரிகள், இலங்கை கல்வி சேவை அதிகாரிகள், சட்டத்தரணிகள், என பலரும் கொண்டனர்.