சிறிலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் கல்வியகம் இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இளைஞர் யுவதிகளுக்கு அரசியல் விஞ்ஞானம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக பயிற்சிகள் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
அரசியல் கட்சி பேதமின்றி இளம் தலைமுறையினருக்கு இலவசமாக குறித்த கல்வியகத்தில் பாடநெறிகள் முன்னெடுக்கப்படும்
விண்ணபங்கள் அனுப்பப்படும் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.
அறிவு கூர்மையான அரசியல்வாதிகளை தோற்றுவிக்கும் முகமாக இந்த கல்வியகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.