கனடா செல்லும் இலங்கையர்கள் வீசா இன்றி 90 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்

கனடாவில் பயணம் மேற்கொள்ளும் இலங்கை குடிமக்களுக்கு வீசா இன்றி 90 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்ற புதிய சலுகை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் சுற்றுலா வருவாயை அதிகரிக்கும் நோக்கில் குறித்த சலுகையை இலங்கை குடிமக்களுக்கு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கனடா சுற்றுலா வருவாயை பொறுத்தமட்டில் இலங்கை பயணிகளால் 12% வருவாய் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் ஜேர்மனி நாடுகளுக்கு அடுத்து இலங்கை குடுமக்களே அதிக அளவில் கனடாவில் பயணம் மேற்கொள்கின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த சிறப்பு சலுகையால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகளை ஈற்க கனடா சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ஆனால், வீசா இன்றி இலங்கை குடிமக்கள் கனடாவிற்கு செல்ல முடியும் என தெரிவித்து வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கைக்கான கனேடிய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை குடிமக்கள் கனடாவுக்குள் நுழைவது தொடர்பில் அமுலில் உள்ள சட்டங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீசா நடைமுறையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர்.