டுவிட்டரைக் கலக்கும் குட்டிப்பெண்: ஒபாமாவின் முன் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த குட்டீஸ்

07af2e5e-0ecf-46aa-9104-faed39e5e305_S_secvpf

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முன் குழந்தை ஒன்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து, சாஷ்டாங்கமாக தரையில் விழுந்திருக்கும் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நம்மூர் கோயில்களில் அங்கபிரதட்சணம் செய்யும் கோலத்தில் இருக்கும் அந்த குட்டிப்பெண்ணின் பெயர் க்ளாடியா. கடந்த மாதம் வெள்ளை மாளிகையில் நடந்த வருடாந்திர விழாவில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று டுவிட்டர் வாசிகள் கருதுகின்றனர்.

இந்த புகைப்படத்தின் ஹைலைட்டே ஒபாமாவின் ரியாக்‌ஷன்தான். ”நான் எதையெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு பாத்தீங்களா?” என்று கேட்பது போன்ற அவரது முகத்தோற்றம், இந்தப் புகைப்படத்தைப் பார்ப்பவர்களை தன்னை மறந்து சிரிக்க வைத்து விடுகிறது. 

இதனால், க்ளாடியா இப்போது இன்டர்நெட்டில் ஹிட் பேபியாகியுள்ளார்.