சிரியாவில் கடந்த வருடம் மட்டும் 652 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்: ஐ. நா. அமைப்பு தெரிவிப்பு

சிரியாவில் கடந்த வருடம் மட்டும் 652  சிறுவர்கள்  உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு  மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது என ஐ.நாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிரியா போரில்  உயிரிழந்த 652   குழந்தைகளில்  அதிகமானோர் பாடசாலைகளில் அல்லது அதற்கு அருகில் இருந்த போதே உயிரிழந்ததாக  ஐ.நாவின் இணைநிறுவனமான யுனிசெஃப்  தெரிவித்துள்ளது.  அத்துடன்  அதிகளவான  குழந்தைகள் நோயினால் உயிரிழந்ததாகவும் போதிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் அவற்றைத் தடுத்திருக்க முடியும் எனவும்  யுனிசெஃப்  தெரிவித்துள்ளது.


அத்துடன்  சுமார் 850-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பல்வேறு கிளர்ச்சி குழுக்களில் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக  உள்நாட்டு யுத்தம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.