சவூதி அரேபியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இன்று தற்கொலை குண்டுத் தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
ரியாத்தில் உள்ள அல்- கொய்த் என்ற கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் பள்ளிவாசலில் 150க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது எதிர்பாராதவிதமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.